டெல்லியில் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை இளம்பெண் ஒருவர் நெய்டாவி்ற்கு டாக்சியில் சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, டாக்சி ஓட்டுனர் மற்றும் அவரின் நண்பரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் ரூ,12,000 ரொக்க பணம், செல்போன் ஆகியவற்றை டாக்சியில் இருந்த நபர்கள் திருடி சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட் பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த பெண் பயணித்த டாக்சி எண் மற்றும் டாக்சின் ஓட்டுனர் குறித்தும் தகவல்களை போலீசர் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து டெல்லி காவல்துறை உயர் அதிகாரி ஈஷ்வர் சிங் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். மேலும் அவர் அளித்துள்ள தகவல்கள் முரண்பாடாக இருப்பதால், பாலியல் புகார் குறித்தும் தங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறியுள்ளார். இருப்பினும் டாக்சி டிரைவரையும் அவரது நண்பரையும் தேடி வருவதாகவும் ஈஷ்வர் சிங் தெரிவித்தார்.