மும்பையில், பிறந்த பச்சிளம் குழந்தைகளை 3 இலட்சம் ரூபாய்வரை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை குற்றப்பிரிவு பிரிவு காவல்துறையினர், ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேரை அதிரடியாக கைது செய்ததன் மூலம் குழந்தைகளை விற்கும் மோசடியை முறியடித்தது. இந்த குற்றவாளிகள், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த புதிய தாய்மார்களை அணுகி, மூளைச்சலவை செய்து அவர்களின் குழந்தைகளை 'தத்தெடுப்பதற்கு' ஏற்பாடு செய்துத்தருவார்கள்.
இதன்பின்னர் அந்த குழந்தைகள் 60,000 முதல் 3 லட்சம் வரை விற்கப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்தது. இந்த குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஒரு மருத்துவரும் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் கூறினர்