பிரபல வடமாநில கட்டுமான நிறுவனம் பெயரில் மோசடி விவகாரம் - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

பிரபல வடமாநில கட்டுமான நிறுவனம் பெயரில் மோசடி விவகாரம் - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
பிரபல வடமாநில கட்டுமான நிறுவனம் பெயரில் மோசடி விவகாரம் - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
Published on

பிரபல வடமாநில கட்டுமான நிறுவனத்தின் பெயரில் போலி காசோலை மூலம் 10 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

புரசைவாக்கம் பகுதியில் இயக்கும் தனியார் வங்கியில், பானுமதி, சாவித்திரி, பிரசாத் மேத்யூ ஆகிய மூன்று பேர், கட்டுமான நிறுவனம் வழங்கிய காசோலையில் உள்ள 9 கோடியே 99 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை தங்கள் நிறுவனத்துக்கு மாற்ற வழங்கினர். இதில் சந்தேகமடைந்த வங்கி நிர்வாகம் அளித்த புகாரில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரில் காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரும் இருப்பது தெரியவந்துள்ளது. பிரபலமான கட்டுமான நிறுவனம் அடிக்கடி வேறு நிறுவனங்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வதை அறிந்து போலியான முத்திரை, கையெழுத்து, காசோலை உள்ளிட்டவற்றை தயாரித்து மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர்.

இந்த வழக்கில் காவல்துறை அதிகாரி மற்றும் வெளிமாநிலத்துடன் தொடர்பு இருப்பதால் வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட ஜாபர், தொழிலதிபர் கவுஷிக் உள்பட மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com