இதுகுறித்து நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பல்வேறு ஆவணங்களை பதிவு செய்து நில மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நில மோசடியில் ஈடுபட்ட சாமிக்கண்ணுவின் கும்பலை கைது செய்திட காவல் உதவி ஆணையாளர் ஆனந்தராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் விசாரணை முடிவில், ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி செய்த சென்னை பள்ளிக்கரணை கோவலன் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு (வயது 54), விருகம்பாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவினை சேர்ந்த ரவிக்குமார் (வயது 38), பள்ளிக்கரணை மலிகேஷ்வரர் நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 59), பெசன்ட்நகர் பாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமரன் (வயது 40) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நில மோசடி கும்பலை கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார்.