உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியிடம் மிமிக்ரி கற்றுத் தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எறையூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராஜசேகர். இவர் ஆறுமாத காலமாக தெருக்களில் உள்ள சிறுமிகளுக்கு மிமிக்ரி செய்து காட்டி வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதே ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு மிமிக்ரி கற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ராஜசேகர் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.