சிலை கடத்தல் வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பின் 5 பேர் கைது

சிலை கடத்தல் வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பின் 5 பேர் கைது
சிலை கடத்தல் வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பின்  5 பேர் கைது
Published on

நெல்லை மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு சிலை கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் அத்தாநல்லூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரமுடையார் கோவிலில் இருந்த இரண்டு துவார பாலகர் சிலைகள் கடந்த 1995-ம் ஆண்டு கடத்தப்பட்டது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள், ஆஸ்திரேலியாவில் உள்ள கேன் பாராவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர். சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் மூலம் அந்த சிலைகள் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தது விசாணையில் தெரியவந்தது.

இந்நிலையில் சிலைகடத்தலில் தொடர்புடைய லட்சுமி நரசிம்மன், ஊமைதுரை, அண்ணாதுரை ,ஆதித்ய பிரகாஷ், வல்லப பிரகாஷ் ஆகிய 5 பேர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்பு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com