திருநின்றவூர் அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ஆவடியை அடுத்த திருநின்றவூர், வத்சலாபுரம், 3வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (34). இவர், அச்சக ஊழியராக உள்ளார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இந்த தம்பதிக்கு 13வயதில் மகள் உள்ளார். இவர், தனது பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.
இதனிடையே மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 20ந்தேதி இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த மூர்த்தி, நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, சிறுமி பாட்டியிடம் கூறி அழுது புலம்பியுள்ளார். இதனையடுத்து, பாட்டி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் போலீசார் மூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை இன்று மாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.