கருமுட்டை விவகாரம்: தாய் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சிறையிலிருக்கும் 4 பேருக்கு உத்தரவு நகல் வழங்கப்படும்.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு தெற்கு காவல் நிலையதில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுமியின் தாய் இந்திராணி, இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் திருத்தம் செய்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து கைதான 4 பேரிடமும் தமிழக அரசின் உயர்மட்ட மருத்துவகுழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கையின்படி கருமுட்டை விவாகாரத்தில் தொடர்புடையை சுதா மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டருக்கும் சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, அச்சிறுமியின் தாய் உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை உத்தரவுவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையிலிருக்கும் மாலதி, இந்திராணி, சையத் அலி மற்றும் ஜான் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.