”ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லையென மருத்துவர்களே சொல்கின்றனர்”-வழக்கறிஞர் ராமராஜ்

”ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லையென மருத்துவர்களே சொல்கின்றனர்”-வழக்கறிஞர் ராமராஜ்
”ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லையென மருத்துவர்களே சொல்கின்றனர்”-வழக்கறிஞர் ராமராஜ்
Published on
ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவிப்பதாக ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் பேட்டியளித்துள்ளார்.
2016 ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தேன் பொத்தை கிராமத்தை சேர்ந்த ராம் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ராம்குமார், சிறையில் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவ்வழக்கு முடித்துவைக்கப்பட்ட நிலையில், மனித உரிமை ஆணையத்தில் ராம்குமாரின் தந்தை பரமசிவன் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் மனித உரிமை ஆணயம் விசாரணை நடத்தி வருகிறது.
இதன் விசாரணை கடந்த இரு தினஙகளுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் ராம்குமார், தரப்பு வழக்கறிஞரும் முன்னாள் நீதிபதியுமான ராமராஜ் புதிய தலைமுறைக்கு தற்போது பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், “மனித உரிமை ஆணைய விசாரணையில் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை என்ற ஒரு கருத்தை மருத்துவர்கள் ஆணித்தனமாக தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஏன் இந்த வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகள் வரை தலையிடுகிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. பெரிய அரசியல் தலையீடு உள்ளதாக கருதுகிறோம். கோடநாடு வழக்கை போல் இதனையும் அரசு மறு திறவு செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com