பெரம்பலூர் அருகே 'ஆர்.டி.ஓ' எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் அனுமந்தம்பட்டியை சேர்ந்தவர் வீரண்ணண் மகன் செல்வக்குமார் (45). திமுக இளைஞரணி உறுப்பினராக இருக்கும் செல்வக்குமார் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் பெரம்பலூர் மாவட்டம் இரூர் அரூகே தேசிய நெடுஞ்சாலையில் RTO எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுபட்டதாக புகார் வந்ததை அடுத்து, செல்வக்குமாரை ரோந்து போலிஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் தாம் திமுக இளைஞரணி உறுப்பினர் என்று கூறியதுடன், அதற்கான அடையாள அட்டையையும் காட்டியுள்ளார். மேலும், திமுக மாநாட்டிற்கு வந்தபோது வழிச் செலவுக்காக RTO எனக் கூறி வசூலில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து செல்வக்குமாரின் இன்னோவா காரை பறிமுதல் செய்த போலிஸார், அதிலிருந்து மு.க.ஸ்டாலின் படம் போட்ட ஸ்டிக்கர் மற்றும் திமுக கொடியும் இருந்ததை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக பாடாலூர் போலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு திமுக உறுப்பினர் ஒருவர் திருச்சி மாநாட்டிற்கு வந்த போது பெரம்பலூர் அருகே RTO எனக் கூறி வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.