வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு: சிறுமி மீது நடத்தப்பட்ட தாக்குதல்

வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு: சிறுமி மீது நடத்தப்பட்ட தாக்குதல்

வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு: சிறுமி மீது நடத்தப்பட்ட தாக்குதல்
Published on

வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாடகைதாரர் மகளின் மண்டையை உடைத்த புகாரில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், மாணிக்கம் நகரைச் சேர்ந்த ராஜசேகரன் சுமதி. தம்பதிகளுக்கு, 21 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். மகன், பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் நிலையில், மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில், 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த, 16ம் தேதி, ராஜசேகரன் குடும்பத்தார் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் வீட்டை இரவோடு இரவாக காலி செய்யுமாறு, சுமதியிடம் கூறியுள்ளார். அதற்கு, தான் முன்பணமாக கொடுத்த, 50 ஆயிரம் ரூபாயை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதை, கொடுக்க மறுத்த, ரமேஷ் மற்றும் அவரது மகன்கள், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசியதோடு சுமதியை ஆபாசமாக பேசி உள்ளனர்.

அதை தட்டிகேட்ட, சுமதியின் மகளிடம், ரமேஷின் இரண்டாவது மகன் அத்துமீறி நடந்ததுடன், ஆபாசமாக பேசி உள்ளார். இது தொடர்பாக, கடந்த, 17ம் தேதி சுமதி அளித்த, புகாரை சேலையூர் போலீசார் விசாரிக்காமல் அலைக்கழித்து வந்த நிலையில், இரண்டு நாட்களாக சுமதி வீட்டின் மின் இணைப்பை, ரமேஷ் துண்டித்துள்ளார்.

இது பற்றி, இன்று காலை, சுமதி மீண்டும் கேட்டபோது, ரமேஷ் ஆபாசமாக பேசியதால், இருதரப்பிற்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், சுமதியின் மகளை ரமேஷ் தாக்கியதில், சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, மூன்று தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, காயமடைந்த சிறுமி, அளித்த புகாரின்படி, சேலையூர் போலீசார் 294 (டி), 324, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வீட்டு உரிமையாளர் ரமேஷை கைது செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com