விருதுநகர் பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் உத்தரவு : தமிழக டிஜிபி

விருதுநகர் பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் உத்தரவு : தமிழக டிஜிபி
விருதுநகர் பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் உத்தரவு : தமிழக டிஜிபி
Published on

விருதுநகர் பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார்.

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் முக்கிய நபரான ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது உட்பட 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார். வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைதுசெய்து குற்றப்பத்திரிகை தாக்க செய்ய ஆணை வெளியாகியுள்ளதாகவும், மேலும் டிஎஸ்பி அர்ச்சனாவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க், டிஐஜி பொன்னி மேற்பார்வையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜூனைத் அகமது கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com