குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் காவலர் கொலை - ரூ.1 கோடி நிவாரணம் அறித்தார் கெஜ்ரிவால்

குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் காவலர் கொலை - ரூ.1 கோடி நிவாரணம் அறித்தார் கெஜ்ரிவால்
குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் காவலர் கொலை - ரூ.1 கோடி நிவாரணம் அறித்தார் கெஜ்ரிவால்
Published on

கடந்த 4ஆம் தேதி, டெல்லி மாயாபுரி பகுதி காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஏஎஸ்ஐ) ஷம்பு தயாள், அப்பகுதியில் கைபேசியை வழிப்பறி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை கைது செய்ய முயன்ற போது , அவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரை பலமுறை குத்தி தப்பித்து சென்றான்.

கடுமையாக தாக்கப்பட்ட காவலர் தயாள், சிகிச்சைக்காக டெல்லி BLK மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் வீர மரணம் அடைந்தார். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , உயிரிழந்த தியாகி ஏஎஸ்ஐ ஷம்பு தயாளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது தியாகத்திற்கு பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி கெளரவத் தொகையும் அறிவித்தார்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள முதல்வர், "பொதுமக்களை பாதுகாக்கும் போது, அவர் தனது உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் தியாகி ஆகினார். அவரை நினைத்து பெருமை கொள்கிறோம். அவரது உயிருக்கு எந்த விலையும் இல்லை, ஆனால் அவரை கவுரவிக்கும் வகையில் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கவுரவ ஊதியம் வழங்குவோம் "., என்று கூறியுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com