டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணை. அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் பி.ஆர்.எஸ் தலைவர் கவிதா.
தெலங்கானா முதவரின் மகளும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிதா, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்காக ஆஜராகினார். முன்னதாக மார்ச் 16ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக சம்மர் அனுப்ப.ப்பட்ட நிலையில், நேரில் ஆஜராகாமல் தவிர்த்தார். இதுகுறித்து உரிய விளக்கங்களுடன் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் பொதுச் செயலாளர் சோமா பாரத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார்.
அப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மார்ச் 24ஆம் தேதி வர உள்ளதால் தான் ஆஜராக இயலாது என்றும் கவிதா தரப்பில் வேறொரு தேதி கோரப்பட்டது. ஆனால் கவிதாவின் கோர்க்கையை நிராகரித்த அமலாக்கத்துறை புதிய சமன் ஒன்றை அனுப்பியது. அதில், கவிதா மார்ச் 20 ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில் , தனது மூத்த சகோதரரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே.டி.ராமராவ் மற்றும் எம்.பி. சந்தோஷ் குமார் ஆகியோருடன் டெல்லி வந்தடைந்த கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினார். மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் சட்டப் பிரிவின் மூத்த உறுப்பினர்களும் டெல்லி வந்துள்ளனர்.