ரூ.1.26 கோடி ஈமு கோழி மோசடி வழக்கு - 6 பேருக்கு ஒரு நாள் கட்டாய காவல் விதித்த நீதிமன்றம்

ரூ.1.26 கோடி ஈமு கோழி மோசடி வழக்கு - 6 பேருக்கு ஒரு நாள் கட்டாய காவல் விதித்த நீதிமன்றம்
ரூ.1.26 கோடி ஈமு கோழி மோசடி வழக்கு - 6 பேருக்கு ஒரு நாள் கட்டாய காவல் விதித்த நீதிமன்றம்
Published on

ரூ.1.26 கோடி ஈமு கோழி மோசடி வழக்கில் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஒருநாள் நீதிமன்றம் களையும் வரை சிறை மற்றும் பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சக்தி ஈமு பார்ம்ஸ், ஈமு கோழி வளர்ப்பில் மாத பராமரிப்பு மற்றும் திட்டம் முடிவில் முதலீட்டுத் தொகையை திருப்பி தருவதாகக் கூறி விளம்பரப்படுத்தி 62 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 26 லட்சத்து ஆயிரம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து 2012ல் மதுரையை சேர்ந்த பரமேஸ்வரி என்ற முதலீட்டாளர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

பாதிக்கப்பட்ட 62 முதலீட்டாளர்களில் 26 பேருக்கு நீதிமன்றம் மூலமும், 31 பேருக்கு நீதிமன்றம் அல்லாத நடவடிக்கையின் மூலமும் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. ஆனால், 5 முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி செலுத்தாததால் வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தீர்ப்பின்போது இன்று ஆஜராகாததால், நிறுவனத்தைச் சேர்ந்த ராமசாமி, சாமியாத்தால், தங்கவேல், தேவி, பழனிச்சாமி, சந்திரன் ஆகிய 6 பேருக்கும் பிணையில் வெளி வரமுடியாத வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், 6 பேருக்கும் தலா ஒரு நாள் நீதிமன்றம் களையும் வரை சிறை தண்டனையும், தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் 6 பேருக்கும் ரூ.10.50 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com