சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கு - கணவன், மனைவிக்கு 4 தூக்குதண்டனை
திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் - மனைவிக்கு 4 தூக்கு தண்டனை விதித்து வெடிகுண்டு வழக்கு விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
2019 ம் ஆண்டு திண்டிவனத்தில் சொத்துக்காக தந்தை ராஜி, தாய் கலைச்செல்வி, தம்பி கவுதம் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துவிட்டு ஏ.சி வெடித்து இறந்து விட்டதாக நாடகமாடிய வழக்கில் மகன் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்நிலையில், இருவரும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி தண்டனை விவரம் மாலை அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்ததையடுத்து மாலை தீர்ப்பு வாசித்தார். அதில் இரண்டு பேருக்கும் தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் நீதிபதி வேல்முருகன் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார்.