”இருந்த கொஞ்ச தலைமுடியும் போச்சே!” - ஏமாற்றிய காஸ்மெடிக் மருத்துவமனைக்கு அபராதம்!

”இருந்த கொஞ்ச தலைமுடியும் போச்சே!” - ஏமாற்றிய காஸ்மெடிக் மருத்துவமனைக்கு அபராதம்!
”இருந்த கொஞ்ச தலைமுடியும் போச்சே!” - ஏமாற்றிய காஸ்மெடிக் மருத்துவமனைக்கு அபராதம்!
Published on

அரியலூரில் ஒப்பந்தத்துக்கு மாறாக தனியார் அழகு மருத்துவமனை செயல்பட்டதால் 2 லட்சம்  ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் வசிப்பவர் வாசுதேவன். இவரது மகன் விபின் தேவ் (33). இவருக்கு தலையில் வழுக்கை பிரச்சனையை சரிசெய்ய சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் அழகு நிலைய மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள், `தலையில் முடியை நடுதல் சிகிச்சை’ மூலம் வழுக்கை பிரச்சனையை சரிசெய்துவிடலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து கடந்த 31-01-2016 ஆம் தேதியில் 60 ஆயிரம்  ரூபாய் செலுத்தி சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்கனவே இருந்ததை விட மோசமாக தலையில் வழுக்கை ஏற்பட்டதோடு தொடர் சிகிச்சையை வழங்க தனியாக பணம் செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்துக்கு மாறாக தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் புகார்தாரரிடம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்துக்கு மாறாக தனியார் அழகு மருத்துவமனை செயல்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையின் சேவை குறைபாட்டிற்காக புகார்தாரருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்  நீதிபதி ராம்ராஜ் தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com