விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கதவை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் என்ஜிஓ காலனி அருகேயுள்ள முத்தமிழ் நகர் பகுதியில் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் பரதன் என்பவர் வசித்து வருகிறார். குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு இன்று காலை பரதன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்ட 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினரிடம் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அடுத்தடுத்த இரு வீடுகளிலும் கதவு உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது தெரிய வந்துள்ளது.
மற்ற இரு வீடுகளிலும் பணம் நகை இல்லாததால் இரு வீடுகளில் கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது, இருப்பினும் அடுத்தடுத்த 3 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விருதுநகர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.