பப்ஜி மதனுக்கு சிறையில் வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்காக அவரது மனைவி லஞ்சம் கொடுக்க முயற்சிப்பது தொடர்பாக பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து சிறைத்துறை டிஐஜி தலைமையில் விசாரணை நடந்து வருகின்றது.
தடைச்செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை முறைகேடான வகையில் குழுவாக விளையாடியதாகவும், விளையாட்டின்போது பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகவும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக அவர் மீது பல பண மோசடி புகார்களும் வந்ததால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.