கோவை: சாரைப்பாம்பை வைத்து வீடியோ வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிப்பு

கோவையில் 8 அடி நீள சாரைப்பாம்பை வைத்து வீடியோ வெளியிட்டதாக பாம்புபிடி வீரர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
காவல்துறையினருடன் உமா - அப்துல் ரஹ்மான்
காவல்துறையினருடன் உமா - அப்துல் ரஹ்மான்pt desk
Published on

செய்தியாளர்: பிரவீண்

கோவை புலியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த உமா ஆகியோர் பாம்பை பிடித்து, கோவை வனச்சரக அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

சாரைப்பாம்பை பிடித்தபோது, “சாரைப் பாம்புகள் விஷமற்றவை; அவற்றால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை. பாம்புகள் விவசாயிகளின் நண்பன்” என்ற விழிப்புணர்வு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.

உமா - அப்துல் ரஹ்மான்
உமா - அப்துல் ரஹ்மான்pt desk

அது வைரலானதை அடுத்து இந்த பாம்பை மீட்ட அப்துல் ரஹ்மான் மற்றும் உமா மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ‘அனுமதியின்றி பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தது’ என வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த தன்னார்வலர்கள் என்பதால், இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கபட்டனர்.
காவல்துறையினருடன் உமா - அப்துல் ரஹ்மான்
காரைக்கால்: சிறுவனை கொலை செய்ததாக மற்றொரு சிறுவன் கைது - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இதுகுறித்து கோவை மாவட்ட வனப் பாதுகாவலரிடம் கேட்டபோது, “இதுபோன்று மற்றவர்கள் ஈடுபடக் கூடாது. நல்லெண்ண அடிப்படையில் இருவரும் கைது செயல்பட்டதால் ஜாமீனில் விடுவிக்கபட்டனர்” என தெரிவித்தார். சமூக ஊடங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com