நைஜீரிய நாட்டு இளைஞரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 2.5 கிலோ ஹெராயினை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
மதுரையை மையமாக கொண்டு செயல்படும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB) அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, கோவை இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நைஜீரிய நாட்டு இளைஞரிடமிருந்து ரூ. 1.15 கோடி மதிப்புடைய 2.3 கிலோ ஹெராயின் போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், திருப்பூரில் தங்கியிருந்து கார்மெண்ட் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்த எட்வின் கிங்ஸ்லி என்பது தெரியவந்தது. இவர், டெல்லியில் இருந்து ரயில் மூலம் போதை பொருளை பனியன் பொருட்களுடன் வைத்து கோவைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
கைபற்றபட்ட போதை பொருள் Amphetamine என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மதுரை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.