கோவை: கோவில் தேர் அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்டியதாக இறைச்சி கடை உரிமையாளர் கைது!

கோவை ராஜவீதி கோனியம்மன் கோவில் தேர் அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்டியதாக இறைச்சி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Accused
Accusedpt desk
Published on

செய்தியாளர்: பிரவீண்

கோவை காந்தி பார்க் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருபவர் முகமது அயாஸ். இவர், கடையில் மிச்சமாகும் மட்டன் மற்றும் கோழி இறைச்சிச் கழிவுகளை ராஜவீதி பகுதியில் உள்ள கோனியம்மன் கோவில் தேர் அருகில் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Kovil Ther
Kovil Therpt desk

இந்நிலையில் இது தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், காந்தி பார்க் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் இறைச்சிக் கழிவுகளை எடுத்து வந்து ராஜவீதியில் தேரின் அருகில் வீசிச் சென்றிருப்பதாக புகார் அளித்தார்.

Accused
சேலம்: வேனில் கடத்திவரப்பட்ட 1.5 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் - கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது

இந்த புகாரின் அடிப்படையில் முகமது அயாஸ் மீது 153A (சாதி, மத இன மொழி தொடர்பாக விரோத உணர்வுகளை தூண்டுதல்), 290 (தொல்லை கொடுத்தல்), 504 (அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com