’ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை நம்பி ரூ.25 லட்சத்தை ஏமாந்தேன்’ - தொழிலதிபர் புகார்

’ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை நம்பி ரூ.25 லட்சத்தை ஏமாந்தேன்’ - தொழிலதிபர் புகார்
’ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை நம்பி ரூ.25 லட்சத்தை ஏமாந்தேன்’ - தொழிலதிபர் புகார்
Published on

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் சங்கர். தொழில் அதிபரான இவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணை நம்பி 25 லட்ச ரூபாயை பறிகொடுத்தது தொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(அவர் அளித்த புகாரின்படி) ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண் ஒருவர் தான் லண்டனில் வசிப்பதாகவும், தன்னுடைய பெயர் குளோரியா எனவும் தினேஷிடம் கூறி நட்பாக பழகி வந்திருக்கிறார். அப்போது அந்த பெண் இவரிடம்தான் ஒரு மருந்து நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், மூலிகை எண்ணெய் விற்பனை செய்ய டீலரை தேடுவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் குளோரியா, தினேஷ் சங்கரிடம் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? உங்களுக்கு இதில் ஆர்வம் உள்ளதா? எனக் கேட்டிருக்கிறார். தினேஷும் அதற்கு தான் ஒரு தொழிலதிபர் எனக் கூறியிருக்கிறார்.

அவரிடம் அந்த பெண் நீங்கள் வேண்டுமானால் எண்ணெயை இறக்குமதி செய்யுங்கள், நான் குறைந்த விலைக்கு மூலிகை எண்ணெய் உங்களுக்குக் கிடைக்க உதவி செய்கிறேன் எனக் கூறியிருக்கிறார். இதற்கு தினேஷ் சங்கரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து குளோரியா இந்தியாவில் உள்ள சர்மா டிரேடிங் நிறுவனத்தில் இருந்து உங்களை அழைப்பார்கள். அவர்கள் கட்ட சொல்லும் பணத்தை கட்டினால் மூலிகை எண்ணெய்யை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள் எனக் கூறியிருக்கிறார்.

சில மணி நேரத்தில் லண்டன் பெண் கூறியதுபோல ஒரு நபர் தினேஷ் சங்கரை தொடர்புகொண்டிருக்கிறார். அவர் உடனடியாக ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை வங்கியில் செலுத்தினால் மூலிகை எண்ணெய் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதனை உண்மை என நம்பிய தினேஷ் சங்கர் அந்த நபர் கொடுத்த வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை செலுத்தியிருக்கிறார்.

ஆனால் பணம் செலுத்தி நீண்ட நாள் ஆகியும் மூலிகை எண்ணெய் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தினேஷ் சங்கர், லண்டன் பெண்ணை தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல அந்த பெண் மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறிய சர்மா டிரேடிங் கம்பெனி எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ் சங்கர் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com