போலி நகைகளை அடகு வைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 67 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை ஆவாரம்பாளையம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தவர் கார்த்திக் (35) இவர், பல்வேறு தருணங்களில் பொதுமக்கள் அடகு வைக்கும் நகைகளை மாற்றி போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக கார்த்திக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து வங்கி மேலாளர் ஜெய்ராம் அளித்த புகாரின் பேரில், 3819 கிராம் தங்க நகைகளை மோசடி செய்ததாக கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.