கோவை: போலி கம்பெனிகளை தொடங்கி வங்கிகளுக்கே ரூ.43லட்சம் இழப்பு ஏற்படுத்திய நபர்கள்!

கோவை: போலி கம்பெனிகளை தொடங்கி வங்கிகளுக்கே ரூ.43லட்சம் இழப்பு ஏற்படுத்திய நபர்கள்!
கோவை: போலி கம்பெனிகளை தொடங்கி வங்கிகளுக்கே ரூ.43லட்சம் இழப்பு ஏற்படுத்திய நபர்கள்!
Published on

கோவையில் தங்கள் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்து, அதன் பெயரில் வங்கிகளுக்கு சுமார் ₹43.76 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்தினபுரியைச் சேர்ந்த மனோகரன், டாடாபாத்தைச் சேர்ந்த தேவராஜ் ஆகியோர் தங்களின் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்ததாக தெரிகிறது. அதன் பெயரில் வங்கி கணக்குகளையும் தொடங்கி வங்கியில் இருந்து POS Machineகளையும் பெற்றுள்ளனர். பின்னர் அதன் மூலம் வெளிநாட்டு Credit Card களை (Skimmed Cards) Swipe செய்து அந்த பணத்தை தங்களின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர்.

இப்படியாக வங்கிகளுக்கு மொத்தம் ரூ.43,76,485.06 ரூபாயை இழப்பீடு ஏற்படுத்தியுள்ளனர். இவர்களது மோசடி அம்பலமாகவே காவல்துறையினர் இருவரையும் தற்போது கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com