கோயமுத்தூரில் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளர் முத்துச்சாமி கோபால்சாமி காலில் விழுவது மற்றும் கோபால்சாமியை முத்துச்சாமி தாக்கிய வீடியோவையும் வெளியிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியது தொடர்பாக வீடியோ எடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், அன்னூர் காவல் நிலைய சரகம், ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 06.08.2021 ஆம் தேதி நடந்த சம்பவத்தில் கோபால்சாமியின் காலில் உதவியாளர் முத்துசாமி விழுகின்ற வீடியோவை 07.08.2021 ஆம் தேதி வெளியிட்டும், அதன் பின்பு 14.08.2021 ஆம் தேதி கிராம நிர்வாக உதவியாளர் முத்துச்சாமி கோபால்சாமி கன்னத்தில் அடித்ததையும் கிராம நிர்வாக அலுவலர் அதை பார்ப்பதையும் வீடியோ எடுத்து உண்மையான சம்பவத்தினை மறைத்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் உருவாக்கியுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் கோவை மாவட்டத்தில் அசாதாரண நிலைக்கு மாற்றிய 06.08.2021 ஆம் தேதி வீடியோ எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று 20.08.2021 ஆம் தேதி, அன்னூர் வடக்கு வருவாய் ஆய்வாளர் பெனாசிர் பேகம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.