சென்னை: ரத்தக் கரையுடன் அமர்ந்திருந்த நபர் - விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த குற்றம்

சென்னை: ரத்தக் கரையுடன் அமர்ந்திருந்த நபர் - விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த குற்றம்
சென்னை: ரத்தக் கரையுடன் அமர்ந்திருந்த நபர் - விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த குற்றம்
Published on

குன்றத்தூரில் பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை குன்றத்தூரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்;டிருந்தனர். அப்போது குன்றத்தூர் பஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் தனது பெயர் ராஜா (38), என்றும் தனது பெண் தோழியை (திருமணத்தை மீறிய உறவு) கொலை செய்து விட்டு வந்ததாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அங்கு சென்று பார்த்தபோது உடைகள் எல்லாம் கிழிந்த நிலையில் அரை நிர்வாணமாக கண்ணம்மாள் (50), என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், குன்றத்தூர் அடுத்த ஜெகநாதபுரம், சேக்கிழார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மா (50), இவர், இங்குள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து ஹாலோ பிளாக் கல் அறுக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் கடந்த சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்த நிலையில், நேற்றிரவு போதையில் வந்த ராஜா கண்ணம்மாவிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது அவரது மகள்கள் வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மீண்டும் வந்த ராஜா கண்ணம்மாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது. மேலும் உடைகள் எல்லாம் கிழிந்து அரை நிர்வாண நிலையில் இருந்ததால் போதையில் இருவரும் சேர்ந்திருக்கும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com