கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக யோகா ஆசிரியரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக பெரிய பேக்குடன் நின்று கொண்டிருந்தவரை பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் பிடித்து விசாரித்துள்ளார். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததை அடுத்து அவரது உடமைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அதில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையத்து நடைபெற்ற விசாரணையில், அவர், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தனிஷ் (29), என்பதும், கல்ட் பிட் ஜிம்மில் யோகா ஆசிரியராக இருப்பதும், தன்னிடம் உடலை குறைக்க வரும் ஐடி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரை பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பீர்க்கன்காரணை போலீசார் அவர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.