சென்னை போரூரில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது. 63 ஆயிரம் பணம் 5 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தொடரும் லாட்டரி விற்பனையை கண்டுகொள்ளாத காவல் துறையினர்.
சென்னை போரூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஆய்வாளர் சந்திரா தலைமையில் சென்று காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 63 ஆயிரம் ரொக்க பணம், 5 செல்போன், பில் புக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போரூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை ஒப்படைத்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கூலித் தொழிலாளிகள், ஏழை அடித்தட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சும் இதுபோல லாட்டரி விற்பனையை உள்ளூர் காவல்துறையினர் கண்டு கொள்ளாத நிலையில் குற்ற நுண்ணறிவு காவல்துறையினர், லாட்டரி விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர்.