தன் குழந்தையை மருத்துவராக்க வேண்டும், வழக்கறிஞர் ஆக்க வேண்டும், ஆசிரியர் ஆக்க வேண்டும் பல கனவுகளுடன் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அத்தோடு, “எனக்கு கிடைக்காத எல்லாம் என் பிள்ளைக்கும் கிடைக்கணும்” என்று ஒவ்வொரு பொற்றோரும் தனது குழந்தையை பார்த்து பார்த்து வளர்த்து வருன்றனர். அவர்களின் கனவுகளை நினைவாக்குவதே தங்களது விருப்பமாகவும், வாழ்நாள் இலக்காகவும் கொண்டு செயல்படுகிறார்கர். இப்படி ஒவ்வொன்றையும் அவர்களின் விருப்பதிற்கேற்றார் போல செய்து ஒரு வழியாக வளர்த்த தனது மகனோ, மகளோ திடீரென தன் உயிரை மாய்த்து கொண்டால் அதை பெற்றோர்களால் தாங்க முடியுமா என்ன?
இப்படி தன் மகனின் பிரிவை தாங்கமுடியாமல் தன் உயிரையும் தந்தை மாய்த்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை, குரோம்பேட்டையை அடுத்த குறிஞ்சி பகுதியை சேர்ந்தவர் செல்வசேகர். இவர் புகைப்பட கலைஞராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி அவரை பிரிந்து சென்ற நிலையில், தனியாளாக தனது மகன் ஜெகதீஸ்வரனை வளர்த்து வந்தார். இவருக்கு வயது 19. இவர் பல்லாவரத்தில் உள்ள பிரபல சி.பி.எஸ்.சி பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து, ‘ஏ’ கிரேடு 85 சதவிகிதம் மதிப்பெண் பெற்றார்.
மருத்துவராக வேண்டும் என்ற தனது மகனின் கனவை நனவாக்க நினைத்த இவர் தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தார். முதல் முறை நீட் தேர்வை எழுதிய ஜெகதீஸ்வரன் தேர்வில் தோல்வி அடையவே. 2 வது முறையும் தேர்வை எழுதியுள்ளார். இரண்டாவது முறையும் தோல்வியை தழுவவே அண்ணாநகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார் தந்தை செல்வசேகர். அதற்கான முன்பணத்தையும் செலுத்திய அவருக்கு எதிர்ப்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. நீட் தேர்வின் தோல்வியால் உயிரையே மாய்த்து கொண்டார் ஜெகதீஸ்வரன்.
மகனின் மரணம் குறித்து மிகுந்த மனவேதனையுடன் பேசிய செல்வ சேகர் , “டாக்டர் கனவுடன் இருந்த மகனை தனி ஒருவராக பார்த்து பார்த்து வளர்த்தேன், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை தடைசெய்வேன் என்று கூறினார். தயவு செய்து இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் ” என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். நீட் தேர்விற்கு எதிராக போராடவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுபோல் சக மாணவன் பயாசுதீன் அளித்த பேட்டியில்
“நானும் ஜெகதீஸ்வரனுடன் படித்தேன் என்னை விட ஜெகதீஸ்வரன் நல்லா படிக்க கூடியவன் நான் நீட் தேர்வில் ஜஸ்ட் பாஸ் செய்ததால் தனியார் கல்லூரியில் 25 லட்சம் கட்டியதால் மருத்துவர் படிக்க வாய்ப்பு வந்தது. நல்லா படிச்ச என் சக நண்பர் கனவு வீணாகிவிட்டதே மருத்துவ கல்விக்கு நீட் வேண்டாம் வேண்டாம்” என உருக்கத்துடன் தெரிவித்தார்.
தேர்வு மட்டுமல்ல, வாழ்க்கையில் எந்த பிரச்னைக்கும் மரணம் ஒரு நாளும் தீர்வாக முடியாது. தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றது என்றால் அதனை சரி செய்வதற்கென்று ஆலோசனை மையங்கள் இருக்கின்றது.
தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050
- Jenetta Roseline s