ஓட்டேரி புளியந்தோப்பு பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் பேசின் பிரிட்ஜ் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா தோட்டம் 1வது தெரு அருகே கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடமிருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கடந்த 6 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த செல்வராசன் (23), டோலாக் சஞ்சய் (20) மற்றும் விஜயசாந்தி (32) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக செல்வராசனிடம் நடத்திய விசாரணையில் மத்திய சென்னை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் என்பவரின் மனைவி உஷா (எ) பானுமதி (40) என்பவரிடம் கஞ்சா வாங்கி விற்றதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் பேசின் பிரிட்ஜ் போலீசார், பெரியபாளையம் அருகே மறைந்திருந்த உஷா என்ற பானுமதி (40), மியா (எ) ஆனந்தவல்லி(36), ஸ்ரீதர் (எ) ராகேஷ் (21), வீரராகவன் (32), முகமது நாசர் (22), மோனிஷா (19) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 180 கிராம் கஞ்சா, ஒரு ஆட்டோ ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆறு நபர்களையும் சிறையில் அடைத்தனர்.