சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி சிக்கிய ரூ.1.42 கோடி - ஹவாலா பணமா? வருமான வரித்துறை விசாரணை

சென்னையில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின், நடந்த ஹவலா பணப் பரிமாற்றம். 1.42 கோடி ரூபாயை பறிமுதல் செய்த போலீ:சார், மூவரை பிடித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Accused
Accusedpt desk
Published on

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக யானை கவுனி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் பூக்கடை உதவி ஆணையர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அங்கு சென்று அறையில் இருந்த மூவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அறையை சோதனை செய்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக பணம் இருந்த தெரியவந்தது.

money seized
money seizedpt desk

இந்நிலையில், பணப் பையுடன் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பணத்தை வைத்திருந்த யாசர் அராபத், மற்றும் அதனை வாங்க வந்த குணா ஜெயின் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து யாசர் அராபத்திடம் நடைபெற்ற விசாரணையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் சொல்லும் கட்டளைக்கு ஏற்ப அந்த நபர்களிடம் பணத்தை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகவும், குணா ஜெயின் பணத்தை வாங்க வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் யானை கவுனி காவல்நிலையம் வந்த அதிகாரிகள் பேக்கில் இருந்த பணம் மற்றும் பிடிப்பட்டவர்களை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com