சென்னையில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, தாலி கட்டியதுடன் பாலியல் வன்கொடுமையும் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரொருவர் கடந்த 27 ஆம் தேதி அன்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது 16 வயது மகளை காணவில்லை என்றும் கண்டுபிடித்துத் தருமாறும் அவர் கூறியிருந்தார்.
அதன்பேரில் திருமங்கலம் போலீசார் சிறுமியின் படத்தை அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி தேடி வந்தனர். இன்னொரு பக்கம் பெற்றோரும் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமி ஒரு இளைஞருடன் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக சிறுமியின் தந்தைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெற்றோர், அங்கு சிறுமி மற்றும் இளைஞர் ஆகியோரை இருவரையும் கண்டுள்ளனர். பின் அவர்களை அழைத்து சென்று திருமங்கலம் காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் `இன்ஸ்டாகிராம் மூலம் மிளவு அழகன் (வயது 19) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அண்ணாநகரில் உள்ள விநாயகர் கோவில் வைத்து எனக்கு அவர் தாலி கட்டினார். அதன் பின்னர் நான் என் வீட்டிற்கு வந்து விட்டேன். இதையடுத்து எனது கழுத்தில் தாலி இருப்பதை இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்து என்னை கடுமையாக எச்சரித்தனர்’ என கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மிளவு அழகன் மீது சிறுமியை கடத்திச் சென்றது, சிறுமியை திருமணம் செய்தது மற்றும் போக்சோ ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.