பினுவுடன் மோத நாகேந்திரன் திட்டமா? திடுக்கிடும் தகவல்கள்!

பினுவுடன் மோத நாகேந்திரன் திட்டமா? திடுக்கிடும் தகவல்கள்!
பினுவுடன் மோத நாகேந்திரன் திட்டமா? திடுக்கிடும் தகவல்கள்!
Published on

வடசென்னையின் பிரபல ரவுடியாக வலம் வந்த நாகேந்திரனின் ஆட்கள், ரவுடி பினுவின் கூட்டாளிகளுடன் மோத திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வடசென்னையைக் கதி கலக்கியவர்களில் முக்கியமானவர் வியாசர்பாடி நாகேந்திரன். 
இவர் மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. தற்போது இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்து வருகிறார்.
 
இரண்டு சிறுநீரகமும் கோளாறு அடைந்ததன் காரணமாக அவதியுற்று வந்த நாகேந்திரனுக்கு, கல்லீரல் பிரச்னையும் இருந்ததால் அதுதொடர்பாக சிகிச்சைப்பெற்று வந்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு சிறைத்துறை மூலம் மனு செய்தார் நாகேந்திரன். பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மருத்துவமனையில் தங்கி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வேலூர் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்துவரப்பட்ட வியாசர்பாடி நாகேந்திரனுக்கு சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனால் யுஎஸ்சி அறையில் இருந்து தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 இதற்கிடையே மருத்துவமனையில் உள்ள நாகேந்திரன் சென்னையில் உள்ள பிரபல ரவுடிகளிடம் தொடர்பை எற்படுத்த முயற்சி மேற்கொள்வதாகவும், போலீசாரிடம் சரணடைந்த பினுவின் கூட்டாளிகளுடன் நாகேந்திரனின் ஆட்கள் மோத வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவமனையில் உள்ள நாகேந்திரன் தொடர்ந்து தீவிர போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது எந்த குற்றச் சம்பத்திலும் ஈடுபடவில்லை என்றாலும், போலீஸார் விசாரணை என்ற பெயரில் நாகேந்திரனுக்கு தொந்தரவு தருவதாகவும் அவரை பார்க்க வரும் உறவினர்கள் கூறுகின்றனர். நாகேந்திரனை பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாக அவரது மனைவி விசாலாட்சி தெரிவித்துள்ளார். அத்துடன் நாகேந்திரனுக்கு அரசு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com