வாகனத்தில் தப்பியோடிய நபரை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலருக்கு காயம்

வாகனத்தில் தப்பியோடிய நபரை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலருக்கு காயம்
வாகனத்தில் தப்பியோடிய நபரை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலருக்கு காயம்
Published on

ஹெல்மெட் அணியாமல் வந்த நபருக்கு அபராதம் விதித்த போது வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிய நபரை துரத்திப் பிடித்தபோது கீழே விழுந்ததில் போக்குவரத்து காவலருக்கு காயம் ஏற்பட்டது.

சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர் ஜோன்ஸ் ராஜன் (35). இவர் நேற்று லஸ் சிக்னலில் உதவி ஆய்வாளருடன் நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கிப் பிடித்தார்.

இதையடுத்து தலைக்கவசம் அணியாமல் வந்த அந்த நபரிடம் அபராதம் கட்டுமாறு கூறியுள்ளார். பின்னர் திடீரென அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார். அப்போது காவலர் ஜோன்ஸ் ராஜன் வண்டியை பிடித்தபடியே துரத்திச் சென்றார். இதனால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், கையில் காயம் ஏற்பட்ட ஜோன்ஸ் ராஜனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து ஜோன்ஸ் ராஜன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வாகனத்தை ஓட்டிய ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் குமார் (23) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தனுஷ் குமார் மீது மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியர் பணியை செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com