சென்னையில் கள்ள நோட்டுகளை பிரிண்ட் செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை மணலி புதுநகரில் வீடு ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் சண்டையிடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் துப்பாக்கி முனையில் அவர்களை சுற்றி வளைத்து நடத்தப்பட்ட விசாரணையில், கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் கும்பல் என தெரியவந்தது.
இந்நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஒன்றின் சீட்டுக்கு அடியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வண்ணாரப்பேட்டையை சேர்ந்த யுவராஜ் (37) மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் (33), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ் (24), திருவொற்றியூர் தாங்கலைச் சேர்ந்த ஜான் ஜோசப் (31), வியாசர்பாடியைச் சேர்ந்த ரசூல்கான் (38), செங்குன்றத்தைச் சேர்ந்த முபாரக் (46) ஆகிய 6 பேரை கைது செய்த மணலி புதுநகர் காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.