’பணம் எடுத்து தரன் கொடுங்க மேடம்’-நாசுக்காக நடந்த ஏடிஎம் மோசடி.!

’பணம் எடுத்து தரன் கொடுங்க மேடம்’-நாசுக்காக நடந்த ஏடிஎம் மோசடி.!
’பணம் எடுத்து தரன் கொடுங்க மேடம்’-நாசுக்காக நடந்த ஏடிஎம் மோசடி.!
Published on

ஏடிஎம்மில் உதவுவது போல பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுப்பட்ட மத்திய அரசு ஊழியர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் சென்னை அடுத்த ஆவடியில் உள்ள மத்திய அரசின் நிறுவனமான ஆவடி டேங்க் ஃபேக்டரியில் டெக்னீசனாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் மையங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் முதியோரை குறி வைத்து அவர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு உதவி செய்வதாக கூறி, அவர்களுடைய ஏடிஎம் கார்டுகளை வாங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தில் பொருத்தி, பின்பு பணம் வரவில்லை என கூறிவிட்டு போலியான ஏடிஎம் கார்டு கொடுத்துவிட்டு உண்மையான ஏடிஎம் கார்டை வேறு ஏடிஎம் எந்திரத்தில் போட்டு பணம் எடுத்து வந்துள்ளார்.

மேலும் இதுபோல பல ஏடிஎம் மையங்களில் லட்சக்கணக்கான ரூபாயை பெண்கள் மற்றும் முதியோரை ஏமாற்றி மோசடி செய்து பணம் பறித்துள்ளார்.

தொடர்ந்து சென்னை எம்கேபி நகரை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஜாக்குலின் என்பவரிடமும் இது போன்ற மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வியாசர்பாடி தனிப்படை போலீசார் மத்திய அரசு ஊழியரான பிரபுவை கைது செய்துள்ளனர்.

பின்னர் மோசடி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரிடம் இருந்து 271 ஏடிஎம் கார்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com