பீர் விற்பனையில் ரகசியக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்பட்டதாக பீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய போட்டி உறுதி ஆணையம் 873 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ரகசியக்கூட்டு வைத்திருந்ததாக கூறப்பட்ட யுனைட்டெட் ப்ரூவரிஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா, ப்ரூவர்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பீர் விலை நிர்ணயம் மற்றும் விநியோகத்தில், கார்ட்டல் எனப்படும் ரகசியகூட்டு வைத்து செயல்பட்டதாக நடந்த விசாரணையின் முடிவில் இந்திய போட்டி உறுதி ஆணையம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.