அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை வெற்றி பெற வைக்க பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தகவல்கள் திருடப்பட்டதை பேஸ்புக் நிறுவனமும் ஒத்துக் கொண்டது. ஆனால் தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்த உதவியது என்பதை இப்போது வரை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை
பேஸ்புக் தகவல் திருட்டு தொடர்பாக இந்தியாவிலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது வரை எந்த பதிலும் இல்லை.
வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது சிபிஐ கேம்பிரிட் அனாலிடிகா மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீசில் சில முக்கிய தகவல்களை சிபிஐ கேட்டுள்ளது. தகவல்களை திருடி இந்திய தேர்தலில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முனையலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது