முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உயர்நீதிமன்றம்கேள்வி

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்புதிய தலைமுறை
Published on

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காமராஜ் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது, பொதுவிநியோக திட்ட கொள்முதலில் 350 கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்ததாக புகழேந்தி புகார் அளித்திருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் புதிய தலைமுறை

அந்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்குசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே லஞ்ச ஒழிப்புத்துறை கடந்தாண்டு பதில் அளித்திருந்ததை புகழேந்தி தரப்பு சுட்டிகாட்டியது. அது குறித்து புகழேந்தி தரப்பு தெரிவிக்கையில்,  ”விசாரணையின் போது, இந்த முறைகேடு குறித்து 2018ஆம் ஆண்டு புகார் அளிப்பட்டது. அதில் விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று லஞ்ச ஒழிப்பு துறையானது கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி 6 மாதங்களில் விசாரணை முடிக்க வேண்டும்  என்பதால், உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டனர்

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்
யூடியூபர் TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்

அதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை, “புகழேந்தி போலவே மேலும் இருவர் இதே புகாரை தெரிவித்துள்ளார். அதில் ஆரம்பக்கட்ட விசாரணை முடிந்து, விரிவான விசாரணை தொடங்கியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. 31 ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பே மனுதாரர் மனுத்தாக்கல் செய்துவிட்டார் ” என்று லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்ற நீதிபதி, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com