மே.வங்கம்: வன்கொடுமையால் இறந்த சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தது பாஜக குழு

மே.வங்கம்: வன்கொடுமையால் இறந்த சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தது பாஜக குழு
மே.வங்கம்:  வன்கொடுமையால் இறந்த சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தது பாஜக குழு
Published on

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகனால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர் பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவினர்; இது தொடர்பான அறிக்கை நாளை ஜே.பி.நட்டாவிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்

மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ஹன்ஸ்காலியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவரின் மகனின் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட அந்த பகுதியை சேர்ந்த 9-வது வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் அந்த சிறுமி உயிரிழந்து உள்ளார்.



இந்த வன்கொடுமை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரான சமர் என்பவரது மகன் சோஹைலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். சம்பவ தினத்தன்று பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை அங்கிருந்த சோஹேல் மற்றும் அவரது நண்பர்கள் கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அவரது வீட்டில் இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛பாதிக்கப்பட்ட மாணவி பலாத்காரம் செய்யப்பட்டாரா? இல்லை காதல் விவகாரத்தில் கர்ப்பம் ஆனாரா?'' என கேள்வி எழுப்பி இருந்தார். இது சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு  மாற்றம் செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



தொடர்ந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க. வழக்கு தொடர்பாக விவரங்களை சேகரிக்கவும், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் வானதி சீனிவாசன், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா அமைத்தார். இந்த உண்மை கண்டறியும் குழுவினர் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து சம்பவம் தொடர்பாக ஆலோசித்தனர். இது தொடர்பாக பேசிய பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரேகா வர்மா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை கட்சித்தலைவர் ஜே.பி.நட்டாவிடம் நாளை ஒப்படைக்க இருக்கிறோம்.சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை முதல்வர் ஏற்கவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com