சென்னையில் மீண்டும் மிரட்டும் பைக் ரேஸர்கள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சென்னையில் மீண்டும் மிரட்டும் பைக் ரேஸர்கள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சென்னையில் மீண்டும் மிரட்டும் பைக் ரேஸர்கள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்
Published on

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

வாகனங்கள் பரபரக்கும் சென்னையின் பிரதான சாலைகளில் மீண்டும் விபரீத விளையாட்டுகளைத் தொடங்கியிருக்கிறார்கள், சட்டவிரோத பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் சிலர். தன்னோடு மட்டுமல்லாமல் எதிரில் வருபவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் இவர்களால், சாலைகளில் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் வாகன ஓட்டிகள். வழக்கம்போல் அல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகயில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் மெரினா கடற்கரையின் காமராஜர் சாலையில், விதிகளை மீறி பைக் ரேஸ் செய்த இளைஞர்களால், வாகன ஓட்டிகள் மிரண்டு போயினர். அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை வைத்து, சாலையை அதிர வைத்ததோடு குறுக்கும், நெடுக்குமாக ஸ்டன்ட் செய்தது அதிர்ச்சியடை ஏற்படுத்தியது.

இதேபோல, வடபழனி, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையிலும் சிறுவர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மூவரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்ததோடு, பெற்றோரை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். காவல்துறை எத்தனை எச்சரிக்கைகளைக் கொடுத்தாலும், சாலைகளில் நடந்து கொண்டிருக்கும் பைக் ரேஸ்கள் தொடர்ந்து கொண்டேதான் இருப்பதாக அச்சத்துடன் கூறுகிறார்கள் வாகன ஓட்டிகள். தண்டனைகளைக் கடுமையாக்குவதோடு, காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com