பேஸ்புக் நட்பு: ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை, வங்கி மேலாளர் கைது

பேஸ்புக் நட்பு: ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை, வங்கி மேலாளர் கைது
பேஸ்புக் நட்பு: ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை, வங்கி மேலாளர் கைது
Published on

பேஸ்புக் மூலம் பழகிய ரஷ்ய பெண்ணை, இந்தியாவுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த வங்கி மானேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், பேஸ்புக்கில் பலருடன் நட்பு வைத்திருந்தார். அதில் ஒருவர், மத்திய பிரதேசம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்த மகேந்திர பிரசாத் சிங். இவர் யூகோ வங்கியில் மானேஜராக பணியாற்றுகிறார். சிங்கும் ரஷ்யப்பெண்ணும் பேஸ்புக்கில் தினமும் சாட் செய்தனர். நட்பு பலமானது. இதையடுத்து, ‘நீங்க இந்தியாவுக்கு வாங்களேன்’ என்று அழைத்தார் சிங். நட்புடன் அழைக்கிறார் என்று நம்பி வந்தார் அந்த ரஷ்யப் பெண். 

செப்டம்பர் 17-ம் தேதி வந்த அவரை, ஒரு ஒட்டலில் தங்க வைத்தார். பிறகு 22-ம் தேதி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்ற சிங், அவரை பாலியல் வன்முறை செய்துள்ளார். பின்னர் அவரை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். ஆன்மிக நகரான இங்கு வந்த இன்னொரு ரஷ்ய பெண் ஒருவரிடம் இதைச் சொல்லியிருக்கிறார் இந்தப் பெண். அவர் ஆலோசனையின் பேரில் போலீசில் புகார் கொடுத்தார் அவர்.
இதையடுத்து போலீசார் சிங்கை கைது செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com