ரேசன் அரிசியை மாவாக்கி கடத்திய 3 பேர் கைது: எத்தனை டன்கள் பறிமுதல்?

ரேசன் அரிசியை மாவாக்கி கடத்திய 3 பேர் கைது: எத்தனை டன்கள் பறிமுதல்?
ரேசன் அரிசியை மாவாக்கி கடத்திய 3 பேர் கைது: எத்தனை டன்கள் பறிமுதல்?
Published on

அரியலூரில் நூதன முறையில் ரேசன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது 2.3 டன் ரேசன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது, இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்த செல்வம் ஆகியோர் அரிசி குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கால்நடை தீவனத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் இரண்டு வாகனத்தையும் பறிமுதல் செய்து வாகன உரிமையாளர் தினேஷ் உட்பட மூவரை கைது செய்து 2.3 டன் ரேசன் அரிசி மாவு மற்றும் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com