ஆரணி: மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – விடுதி துணை காப்பாளரின் மோசமான செயல்

ஆரணி: மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – விடுதி துணை காப்பாளரின் மோசமான செயல்
ஆரணி: மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – விடுதி துணை காப்பாளரின் மோசமான செயல்
Published on

ஆரணி அருகே அரசு நிதிஉதவி பெறும் பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விடுதி துணை காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பத்தியாவரம் கிராமம் சூசைநகர் பகுதியில் உள்ள புனித வளனார் ஆண்கள் அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் அருகே இயங்கிவரும் விடுதியில் 113 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று விடுதியில் தங்கி பயின்று வரும் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள,; திருவண்ணாமலை சமூக நலத்துறைக்கு இணையதளம் மூலம் புகார் ஒன்று அளித்துள்ளனர். அந்த புகாரில் விடுதி துணை காப்பாளர் துரைப்பாண்டி (35) என்பவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து புகாரின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 8 மாணவர்களை திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். வுpசாரணையின் முடிவில் துணை விடுதி காப்பாளர் துரைப்பாண்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் அவர் மீது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார், விடுதி துணை காப்பாளர் துரைப்பாண்டியை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com