திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி ரோட்டில் இயங்கி வருகிறது, அசைவ உணவகமான 7 ஸ்டார் ஹோட்டல். இந்த அசைவ உணவகத்தில் கடந்த 8 ஆம் தேதி இரவு நேரத்தில் ஆரணியில் உள்ள அரிசி ஆலையில் பணி புரியும் ஆரணி லட்சுமி நகரை சேர்ந்த ஆனந்தன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பிரியதர்ஷினி சரண் மற்றும் அவருடைய மகள் லோக்ஷினி (வயது-10), ஆரணி ஷராப் பஜார் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் சந்தியா மற்றும் லட்சன், திலகவதி, பாத்திமா யாகூப், டிஷ்ணு, சீனிவாசன் என பலர் சாப்பிட்டுள்ளனர்.