கோவை: மொபைல் போனில் விளம்பரம் பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்று மக்களுக்கு ஆசைகாட்டி, மக்களை ஏமாற்றுவதாக மை வி3 நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன் மீதான புகார்கள் குறித்து மை வி3 நிறுவனத்தின் உரிமையாளர் பேசியது என்ன என்பதை பார்க்கலாம்.
மை வி3 நிறுவனத்தின் வழக்கு என்ன?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைலில் MyV3 Ads நிறுவன ஆப்பில், ரூ.300 கட்டி விளம்பரம் பார்த்தால், தினரி ரூபாய் 4 வங்கி கணக்கில் ஏறும் வருமானம் கிடைக்கும் என்றும் இதை தவிற, ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கட்டி மாதா மாதம் வருமானத்துடன் ஆயுர்வேத கேப்சூல்கள் வாங்கிக் கொள்ளலாம். என்றும் நீங்கள் மற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என நூதன முறையில் மக்களை ஏமாற்றி MLM மோசடி நடைபெறுவதாக MyV3 Ads நிறுவனத்தின் உரிமையாளார் சக்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜனவரி 19ஆம் தேதி 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் , MyV3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக கடந்த திங்கட்கிழமை (ஜன.29) அன்று, கோவை நீலாம்பூர் எல்&டி பைபாஸ் பகுதியில் சுமார் 6 ஆயிரம் வாடிக்கையாளார் திரண்டனர். வெளியூர்களில் இருந்தும் பேருந்துகளில் வந்து மக்கள் கோவையில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது ஒருபுறம் இருக்க MyV3 Ads நிறுவன அதிபர் சக்தி ஆனந்த் மீது, 16 பேர் கொண்ட குழு கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், சக்தி ஆனந்த் ஏற்கனவே நடத்திய V3 ஆன்லைன் டிவி மூலம் மோசடியில் ஈடுபட்டு தங்களை ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் புகார்கள் குறித்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் வழக்கறிஞர்கள் உடன் சக்தி ஆனந்த் ஆஜராகி விளக்கம் அளித்தார் MyV3 Ads நிறுவன அதிபர் சக்தி ஆனந்த்.
விசாரணைக்கு பின்னர் சக்தி ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசியபொழுது,
”அந்த கூட்டத்தை நான் கூட்டல. ஆனால், நான் கலந்து கொண்டேன். அதற்காக என் மீது வழக்கு போட்டாலும் போடலாமே தவிர எனக்கு எந்த தகவலும் வரல.
மக்களுக்கு சொல்றது ஒரே விசயம்தான். பொதுமக்களுக்கும் சரி எனது மெம்பர்களுக்கும் சரி. நாம இது வரைக்கும் சரியாக இருந்திருக்கோம். இனிமேலும் இருப்போம். பிரபலம் ஆனாலே ப்ராபலம் வரத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்துதான் போக வேண்டும். 50 லட்சம் உறுப்பினர்கள், கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும்போது, இதுபோன்ற கேள்விகளும் சந்தேகங்களும் வருவது இயல்பு. அதைத் தாண்டி சந்தேகங்களை கலைந்து அப்பழுக்கற்வர்கள் என்பதை நிரூபித்து செயல்படுவது மட்டுமே ஒருவழி.
நடந்த நிகழ்வை நான் ஏற்பாடு பண்ணல. ஆனா நடந்திருச்சு. உலக வரலாற்றில் இப்படியொரு சம்பவம் எந்த கம்பெனியிலும் நடந்ததில்லை. இந்த ஆச்சரியத்தில் இருந்து இன்னும் மக்கள் மீளவே இல்லை. அப்படி இருக்கும்போது இந்த விசயத்தை, மக்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் விதமாக மிரட்டி கூட சொல்றாங்க. நான் கூப்பிட்டு இருந்தால் திங்கட்கிழமை கூப்பிட்டு இருக்க மாட்டேன் ஞாயிற்றுக் கிழமையே கூப்பிட்டிருப்பேன்.
வழக்கு போட்டது 19ஆம் தேதி. நிகழ்ச்சி நடந்தது 29ஆம் தேதி. நான் ஞாயிற்றுக்கிழமையே வச்சிருக்கலாமே, எல்லாரும் லீவு இருக்கும் வந்திபாங்கல்ல. கூட்டம் கூட்டினால் தப்பித்துக் கொள்ளலாம்னு யாருங்க சொன்னது. ஏத்தனையோ அரசியல் தலைவர்கள் எல்லாம் உள்ளே போயிட்டாங்க. என்ன பண்ணுச்சு கூட்டம் அவங்கள காப்பாத்துச்சா. இந்த அறிவு எனக்கு இருக்குமா இல்லையா. கூட்டத்துக்கும் தப்பித்துக் கொள்வதற்கும் தொடர்பில்லை.
இந்த கூட்டத்தை நான் கூட்டியிருந்தால் மீடியாவை அழைத்திருப்பேன். நான் உங்களை அழைத்தேனா. நீங்களாகதானே வந்தீங்க. நான் கூட்டத்தை கூட்டியிருந்தால் அங்கே நான் எழுச்சியுரையாற்றி இருக்கணுமா இல்லையா. நான் பேசவே இல்லை. வந்ததுக்கு நன்றிப்பா கிளம்புங்கப்பான்னு சொன்னேன். நான் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்திருந்தால் யூ-டியூப்ல சொல்லியிருக்க மாட்டேன். என்னோட ஆப்ல சொல்லியிருப்பேன்.
இன்னும் நான் சொல்கிறேன். எனக்கு அனுமதி வாங்கிக் கொடுங்க. என்னோட கூட்டத்தை கூட்டி நான் யார்னு காண்பிக்கிறேன். எந்த மலையடிவாரத்திலேயோ அல்லது பொட்டல் காட்டிலேயோ அனுமதி வாங்கிக் கொடுங்க. நான் என்னோட கூட்டத்தை கூட்டிக் காட்றேன். அப்ப நான் யார்னு தெருச்சுக்குவீங்க. இந்த கூட்டத்தை நான் கூட்னேன்னு சொல்லி அசிங்கப்படுத்தாதீங்க” என்றார்.