"மது வாங்க ரூ.1.5 லட்சம் ஐபோன் 500க்கு விற்பனை”-அலைக்கழித்த போலீஸ்; திருடர்களை தானே பிடித்த இளைஞர்!

காவல்துறையினரை நம்பி பயனில்லை என 15 நாட்கள் அலைந்து திரிந்து திருடர்களை தாமே பிடித்த இளைஞரிடம், திருடர்களை விட்டுவிடு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என காவல்துறையினர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் திருடர்கள்
செல்போன் திருடர்கள்pt
Published on

செல்போனை பறிகொடுத்த இளைஞருக்கு காவல்துறை செய்தது என்ன?

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் ( 28). பி.காம் பட்டதாரியான இவர் சென்னையில் வேலை தேடிவந்து கடந்த சில மாதங்களாக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கக்கூடிய ஹோட்டல் எவரெஸ்ட் இன் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மே மாதம் 1-ம் தேதி அதிகாலை வேளையில் மேலாளர் டேபிளில் தனது ரூபாய் 1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை வைத்துவிட்டு அதன் அருகிலேயே சலீம் உறங்கியுள்ளார். தூங்கி எழுந்து பார்த்தபோது தனது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

செல்போன் திருட்டு
செல்போன் திருட்டு

சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் விடுதிக்கு உள்ளே வந்து அவரது செல்போனை திருடி செல்வது பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளோடு பெரியமேடு காவல் நிலையத்திற்கு சென்ற சலீமிடம் பெரியமேடு போலீசார் புகார் பெறாமல் நான்கு நாட்கள் அலையவிட்டு பின் 5-வது நாள் தாங்கள் கூறியபடி எழுதி புகாரை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சலீம் காவல் நிலையம் சென்று கேட்டபோதெல்லாம் திட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதனால் சலீம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் தனது செல்போன் திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

செல்போன் திருடர்கள்
”இரட்டை குவளை முறை போன்ற கொடுமைகள் இல்லையென நிரூபிக்க முடியுமா?” - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

தானே தேடியலைந்து பிடித்த இளைஞர்!

புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தனது செல்போனை திருடி சென்ற நபரை கண்டறியும் வேலையில் சலீம் தானே இறங்கியுள்ளார். பணி நேரம் முடிந்த பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தி.நகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் அலைந்து சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரை தேடி அலைந்து உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 7:30 மணியளவில் தி.நகர் பேருந்து நிலையத்தில் தனது செல்போனை திருடி சென்ற நபரை கண்டறிந்து சலீம் பிடித்துள்ளார். சலீம் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

செல்போன் திருட்டு
செல்போன் திருட்டு

தன்னுடைய 1.5 லட்சம் மதிப்புடைய மொபைல் போனை வேறொரு நபரிடம் கொடுத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்ததை கேட்டு சலீம் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் திருடிய நபரை ஆட்டோவில் ஏற்றி நேரடியாக செண்ட்ரல் ரயில் நிலையம் சென்ற சலீம், அங்கு செல்போன் விற்றுக் கொடுத்த நபரையும் பிடித்துள்ளார். பின் இருவரையும் பெரியமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

செல்போன் திருடர்கள்
’CSK-லிருந்து வெளியேறுங்கள்’- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு Fleming-ஐ குறிவைக்கும் BCCI

திருடியவர்களை அனுப்பிவிடு என்று கூறிய காவல்துறையினர்!

பெரியமேடு காவல்நிலையம் சென்ற சலீம், செல்போன் திருடிய நபரை தானே பிடித்து விட்டதாகவும் தனது செல்போனை மீட்டு தருமாறும் பெரியமேடு போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை அலட்சியம் செய்த பெரிய மேடு காவல்துறையினர், காவல் நிலைய போலீசார் வெளியில் சென்று விட்டதால் பிடித்த நபர்களிடம் செல்போன் நம்பர் மற்றும் முகவரியை வாங்கிவிட்டு அனுப்பிவிடு பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

செல்போன் திருட்டு
செல்போன் திருட்டு

இதனையடுத்து சலீம் இன்று காலை முதல் பெரியமேடு காவல் நிலையத்தில் காத்திருந்து மதியம் 2:30 மணியளவில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு செல்போன் திருடர்களை அழைத்து வந்து நேரடியாக செய்தியாளர்களை சந்தித்தார்.

செல்போன் திருடர்கள்
செல்போன் திருடர்கள்

செய்தியாளர்களிடம் பேசிய சலீம் பெரியமேடு காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவித்தார்.

செல்போன் திருடர்கள்
ஒரே ஆட்டத்தில் வெளியேறிய 2 அணிகள்.. வாழ்வா சாவா ஆட்டமாக மாறிய RCB - CSK போட்டி! LSG-ஐ காலி செய்த DC!

காவல்துறையினரை குற்றஞ்சாட்டிய இளைஞர்!

செய்தியாளர்களை சந்தித்த சலீம், ”புகார் அளிக்க சென்றபோது என்னை நான்கு நாட்கள் அலைக்கழித்து பின் ஐந்தாம் நாள் தான் வரச் சொன்னார்கள். நான் எழுதிய புகாரை கிழித்து போட்டுவிட்டு செல்போன் திருடு போகவில்லை காணாமல் போய்விட்டதாக புகாரளிக்க வற்புறுத்தி மிரட்டி எழுதி வாங்கினார்கள். இனி காவல்துறையினரை நம்பி பயனில்லை என சிசிடிவி காட்சிகளை எடுத்துகொண்டு, சென்னையில் ஒவ்வொரு ஏரியாவாக சென்று 15 நாட்களாக அலைந்துதிரிந்து குற்றவாளிகள் இருவரையும் கண்டுபிடித்தேன்.

ஆனால் பிடித்த இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது, அதனை பொருட்படுத்தாமல் திருடர்களை அனுப்பிவிடு என என்னை அசிங்கமாக திட்டி வெளியே அனுப்பிவிட்டார்கள். காலை 7.30 மணி முதல் 4 மணி வரை செல்போன் திருடர்களோடு தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன், எனக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை ” என வேதனையோடு தெரிவித்தார்.

செல்போன் திருடர்கள்
செல்போன் திருடர்கள்

இந்த நிலையில் செய்தியாளர்கள் முன்னிலையில் பெரியமேடு காவல்துறையினருக்கு கால் செய்து குற்றவாளியை என்ன செய்வது? என கேட்டபோது, நேரில் வா பார்த்துக் கொள்ளலாம் என எதிர்முனையில் பேசிய போலீசார் தெரிவித்து விட்டு போனை கட் செய்தார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் மூலமாக பெரியமேடு காவல்துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து, அவசர அவசரமாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்போன் திருடர்கள்
"டிரென்ட் போல்ட் இல்லை.. அவர் தான் என்னை அதிகம் பயமுறுத்தினார்! 100 முறை பார்ப்பேன்!" - ரோகித் சர்மா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com