இளைஞர் ஒருவர் குடிபோதையில் தனது தந்தை மீது அம்மி கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை பகவதி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வினோத். எம்.பி.ஏ வரை படித்த இவர் கோவிலூர் என்ற ஊரில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருகிறார். இவரது பொற்றோர்களான செல்வராஜ்- மஹாலட்சுமி ஆகிய இருவரும் குஜிலியம்பாறை பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு உதவியாக மஹாலட்சுமி உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் வினோத் குடிபோதையில் அதிகாலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மற்றும் நண்பர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைத் தட்டி கேட்ட தந்தை செல்வராஜையும், தாய் மஹாலட்சுமியை வினோத் கண்டித்துள்ளார். மேலும் வினோத் வாக்குவாததில் ஈடுபட்டு அவரது தந்தை செல்வராஜை அம்மி கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். தாய் மஹாலட்சுமியை கத்தியால் குத்தியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜிலியம்பாறை போலீசார் இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து குடிப்போதையிலிருந்த வினோத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் மகனே குடிப்போதையில் தந்தையை கொலை செய்துவிட்டு தாயை கத்தியால் குத்திய சம்பவம் குஜிலியம்பாறை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.