அந்தக் கல்லூரியில், ஒரு குறிப்பிட்ட துறையின் தலைவராக பணியாற்றும் துணைப் பேராசிரியர் ஒருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்தத்துடன் உரையாடுதல் மற்றும் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாக பேசிய வாட்ஸ்அப் சேட்டிங் ஆகியவை வெளியாகி உள்ளன. சில மாணவிகளின் பொருளாதார நிலையை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக மாணவி ஒருவர் கல்லூரி முதல்வரிடம் கடந்த சனிக்கிழமை எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாணவியிடம் உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்படி எதுவும் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது.